சேலம் நகரத்தில் பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியின் விடுதியில் தங்கி வந்து இருக்கிறார். சம்பவத்தன்று விடுதியில் உள்ள சக நண்பர்கள் வெளியே சென்று திரும்பிய போது விடுதியின் கதவு உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது மனோஜ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையா அல்லது காதல் விவகாரம் தொடர்பாக மாணவர் தற்கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்