எந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி பலியான பெண்... இழப்பீட்டில் மீதி பணம் கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்

Update: 2024-09-05 01:51 GMT

திருவள்ளூர் ஆவின் நிறுவன இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுப்பதாக கணவர் புகாரளித்துள்ளார். சேலம் பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த கார்திகேயன் என்பவர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 20ம் தேதி திருவள்ளூர் ஆவின் நிறுவனத்தில் வேலைபார்த்த தனது மனைவி எந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி பலியாகிவிட்டதாகவும், அப்போது ரூபாய் 11 லட்சம் இழப்பீடு தருவாதாக கூறிய ஒப்பந்ததாரர், 4 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதித்தொகையை தரமறுப்பதுடன் கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்