ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுப்பவர்களே உஷார்.. சேலத்தை அதிரவிட்ட மோசடி.. விசாரணையில் அம்பலமான விஷயம்

Update: 2024-08-27 13:56 GMT

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார். அருகில் உள்ள சுகவனேசுவரர் கோயில் வணிக வளாகத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை வைத்திருக்கும் இவரிடம், செல்வம் என்பவர் தன் ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்தை கொடுத்து மனைவிக்கு ஆதார் கார்டு பெற்றுத் தரும்படி விண்ணப்பித்திருக்கிறார். இந்நிலையில் நீண்ட நாள்களாகியும் ஆதார் கார்டை திருப்பிக் கொடுக்காமல் வினோத்குமார் இழுத்தடித்து வந்த நிலையில், சந்தேகமடைந்த செல்வம் போலீசில் புகாரளித்திருக்கிறார். விசாரணையில், செல்வத்தின் ஆதார் கார்டு முகவரியில் சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த செந்தில் என்பவரின் போட்டாவை வைத்து, புதிய ஆதார் கார்டை போலியாக தயாரித்ததும், அதன் மூலம் வீட்டு கடன் வாங்க முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்தான விசாரணையை கையிலெடுத்த போலீசார், வினோத்குமார், அவரது கூட்டாளிகளான யாதவ் காந்த், செந்தில் என மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்