பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கு... "இப்ப கூட சொட்டு மருந்தோட வந்திருக்கேன்" - எஸ்.வி.சேகர்
கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டு இருந்ததை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, 2 பிரிவுகளில் வழக்கு பதிவானது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக எஸ்.வி.சேகர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தான் கண்ணில் சொட்டு மருந்து போட்டு இருந்ததால் தவறுதலாக பகிர்ந்துவிட்டதாக சமீபத்தில் எஸ்.வி.சேகர் கூறி இருந்த நிலையில், கண்ணுக்கான சொட்டு மருந்துடன் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.