ரஷ்ய தூதரக பாதுகாப்பு அதிகாரி ஒரு ராணுவ உளவாளி என பிரிட்டன் குற்றம் சாட்டி இருந்தது. இதையடுத்து கடந்த வாரம் ரஷ்ய தூதரக அதிகாரியை பிரிட்டன் வெளியேற்றியது... இதற்குப் பழி வாங்கும் விதமாக ரஷ்யா தங்கள் நாட்டில் உள்ள பிரிட்டன் தூதரக பாதுகாப்பு அதிகாரி ஏ.டி. கோகில் ஒருவாரத்திற்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இங்கிலாந்தின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது... இந்நிலையில், கோகிலை வெளியேற்றியது ஒரு அவநம்பிக்கையான நடவடிக்கை என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.