திடீரென உள்ளே இறங்கிய விஜிலென்ஸ்.. நொடியில் ஜன்னல் வழியே பறந்த பணம்.. தெறித்து ஓட்டம்.. பரபரப்பான RTO ஆபீஸ்
திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் , ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல் வாகனங்களுக்கு எப்சி எடுத்தல் போன்ற பணிகளிக்கு இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் . அப்பொழுது அலுவலக ஊழியர்கள் இடைத்தரகர்கள் மற்றும் புரோக்கர்கள் ஆகியோரிடமிருந்து 33 ஆயிரம் ரூபாய் உட்பட கணக்கில் வராத பணம் 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. முன்னதாக சிலர் ஜன்னல் வழியாக பணத்தை வீசி அங்கிருந்து தப்ப முயன்றனர் அவர்களை மடக்கி பிடித்தலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.