"ரூ.180 கோடி போதைப்பொருள்" - வசமாக சிக்கிய கடத்தல் தம்பதி - குப்பைக்குள் மறைத்து வைத்து தந்திரம்

Update: 2024-03-02 04:46 GMT

சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற பொதிகை விரைவு ரயில் மூலமாக போதைபொருள் கடத்தப்படுவதாக சென்னை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று காலை மதுரையில் இறங்கிய சந்தேகத்துக்கு இடமான பயணி மற்றும் அவருடைய மனைவி வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 30 கிலோ எடையுள்ள மெத்தாம்பேட்டமைன் எனும் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 6 கிலோ போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அங்கு சென்ற அதிகாரிகள், அவற்றையும் பறிமுதல் செய்தனர். அதன்படி, கைப்பற்றப்பட்ட 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப் பொருளின் மொத்த மதிப்பு சுமார் 180 கோடி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்