உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் நிகழும் சாதிய மோதல்களை தடுக்க, ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது. கடந்த ஜூன் 18-ல், பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசிடம் ஒரு நபர் குழு வழங்கியது. அதில், சாதிய பெயர்களில் செயல்படும் அரசு கல்வி நிறுவனங்களை, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர பரிந்துரை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் மறு சீரமைப்பு பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரும் திட்டமில்லை என தமிழக அரசு செய்தி வெளியிட்டது. இதன்மூலம், சந்துரு அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, அரசின் முடிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என சந்துரு தெரிவித்தார்.