மதுரை டிவிஎஸ்நகர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு, சுதா என்பவர் பொங்கல் பரிசு தொகுப்பு பெற சென்றுள்ளார். ஆனால், கைரேகை விழவில்லை என்பதற்காக, அவருக்கு பரிசு தொகுப்பு மறுக்கப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ் வைத்திருந்தபோதிலும், மீண்டும் தாசில்தாரிடமிருந்து சான்றிதழ் பெற்று வருமாறு, நியாய விலைக்கடை ஊழியர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். அதேபோல், உடல் நலம் குன்றிய மூதாட்டிக்கு பதிலாக பொருட்கள் வாங்கி வந்த அவரது சகோதரரிடம், பொங்கல் தொகுப்பு தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமும் புதிதாக சான்றிதழ் பெற்று வருமாறு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற நிலையில், அங்கு இதுதொடர்பாக அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என கூறியுள்ளனர். இதனால், இருவரும் வேதனையடைந்தனர்Rejection of Pongal gift due to lack of fingerprints