"முடிவை மறு பரிசீலனை செய்ங்க" - ஈபிஎஸ் அழுத்தம் | EPS | AIADMK

Update: 2024-02-23 02:45 GMT

வடலூரில் சத்திய ஞான சபை பெருவெளியில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட்டு, அந்த இடத்தை மீண்டும் பொதுமக்களுக்கே வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நெய்வேலி நகரியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வடலூரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு அடிக்கல் நாட்டியிருப்பதை கண்டிப்பதாக கூறினார். அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்