பணிக்கு சென்றவர் சாலையில் இறந்து கிடந்த சோகம்.. உடனே போலீசார் செய்த செயல்.... கொந்தளித்த உறவினர்கள் எழுப்பிய சந்தேகம்

Update: 2024-09-01 05:41 GMT

ராணிப்பேட்டையில் சாலையோரம் சடலமாக மீட்கப்பட்ட நபரை, உறவினர்கள் அனுமதியின்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் மேல்நெல்லி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், 27ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. களம்பூர் கஸ்டம்பாடி பகுதியில் அவர் பணிபுரிந்த ஹோட்டலில் உறவினர்கள் விசாரித்து வந்த நிலையில், சாலையோரம் இறந்த நிலையில் சடலமாக ஆனந்தன் மீட்கப்பட்டுள்ளார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், விபத்தால் ஆனந்தன் உயிரிழந்த‌தாகவும், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆனந்தன் உடலில் காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், தங்களுக்கு தெரியாமல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்