தமிழக மீனவர்கள் 5 பேரை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக, மத்திய அரசு கூட்டு குழு மூலம் விசாரணை நடத்தி வருவதாக இந்திய கடலோர காவல்படை ஐஜி டோனி மைக்கேல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படை ஐஜி டோனி மைக்கேல், கொடியசைத்து இந்த பணியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கடலோர காவல்படை ஐஜி டோனி மைக்கேல், தமிழக மீனவர்கள் 5 பேர் மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக மத்திய அரசின் கூட்டு குழு மூலம் விசாரணை நடைப்பெற்று வருகிறது என்றார். இலங்கையில் இருந்து கண்காணிக்கும் சீன உளவு கப்பலின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் இந்திய அரசு செயல்படும் என உறுதி அளித்தார்.