ராமேஸ்வரத்தில் 1 நிமிடத்துக்கு ரூ.70,000.. ஒரே நாளில் ரூ.10 கோடி இழப்பு
மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில்...ராமேஸ்வரத்தில் படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன...மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளதோடு நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.