ராமேஸ்வரத்தில் கடலில் மாயமான மீனவரை தேடுவதற்கு நிதி இல்லை என் கூறிய அதிகாரிகளை கண்டித்து, மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மீன்வளத்துறை அலுவலகத்திற்கு சென்ற மீனவர்கள், அதிகாரியின் மேஜை மீது பிச்சை எடுத்து திரட்டிய நிதியை கொட்டிவிட்டு சென்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவ பெண் சரண்யா, தந்தையை மாயமாகி 4 நாட்களாகியும் இன்னும் கண்டுபிடித்து தரவில்லை என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.