முதல்வரை நேரில் சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை | PMK | Ramadoss | CM Stalin
வன்னியா் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வரை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்...
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாமக நிறுவனா் ராமதாஸ் மனு அளித்து வலியுறுத்தினாா். பாமக கவுரவத் தலைவா் ஜி.கே.மணி, அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா ஆகியோரும் உடன் இருந்தனா். சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தில் தான் முதல் முதலில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டிருக்க வேண்டும் என்றும், அந்த வாய்ப்பை பீகாா், கா்நாடகம், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களிடம் நாம் இழந்து விட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்... தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து 20 மாதங்கள் ஆகும் நிலையில், அதற்கான சட்ட மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மனுவில் கவலை தெரிவித்தார். மேலும், வன்னியா் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்https://youtu.be/78SFET4u_hshttps://youtu.be/78SFET4u_hs