சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வருகை தந்தனர். அதில் சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற ரசிகர், ராஜஸ்தான் அணிக்கு வித்தியாசமான முறையில் ஆதரவளித்து மைதானத்திற்கு சென்றிருந்தார். தர்பூசணியில் ராஜஸ்தான் அணி வீரர்களின் முகங்களை ஓவியமாக வரைந்து வித்தியாசமான முறையில் ஆதரவு அளித்தார். இந்த ஓவியங்களை வரைய சுமார் 7 மணி நேரம் தேவைப்பட்டதாக கார்த்திக் தெரிவித்தார்.