தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் சேவைகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னை - நாகர்கோயில் மற்றும் மதுரை - பெங்களூர்
இடையே இன்று வந்தே பாரத் ரயில்
சேவை துவங்க இருக்கிறது. சென்னை எழும்பூர்,
நாகர்கோவில் வந்தே பாரத் துவக்க நாள் சிறப்பு ரயில்
சென்னையில் இருந்து மதியம் 12.30க்கு புறப்பட்டு இரவு 9.30க்கு நாகர்கோவில் சென்று சேரும்.
சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.