அவசரத்திற்கு உதவும் ஆம்புலன்ஸோடு பந்தயம் கட்டி பறந்த ரேசர்ஸ் - கொக்கி போட்டு தூக்கிய போலீஸ்

Update: 2023-11-20 09:28 GMT

தென்காசி அருகே ஆம்புலன்ஸை பயன்படுத்தி இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகாசியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தனியார் நிறுவனத்தின் இருசக்கர வாகன விளம்பரத்திற்காக சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தோடு அதிவேகத்தில் வந்துள்ளனர். அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பதிவிடப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி சோதனை செய்து, அனைத்து வாகனங்களையும் மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளார். பந்தயத்திற்காக ஆம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பந்தயம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்