அதிரடி சோதனையில் சிக்கிய போலி ஹால்மார்க் தங்க நகைகள்
புதுக்கோட்டையில், போலி ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு விற்பனை செய்து வந்த ஆயிரத்து 643 கிராம் போலி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலுப்பூரில் அமைந்துள்ள தங்க நகைக்கடையில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலி ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 643 கிராம் போலி ஹால்மார்க் தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.