திடீரென புல்டோசருடன் வந்த அதிகாரி..எதுவும் கேட்காமல் இடிக்கப்பட்ட வீடு..
திடீரென புல்டோசருடன் வந்த அதிகாரி..எதுவும் கேட்காமல் இடிக்கப்பட்ட வீடு..இடித்த பின் கொடுத்த நோட்டீஸில் பகீர் - கதறிய நபர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே முன்னறிவிப்பின்றி குடியிருப்பை அறநிலையத்துறையினர் அகற்றியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மலையாண்டி கோவில் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றியது. அப்போது, அந்த இடத்தை பயன்படுத்தி வந்த ராஜா என்பவர் கேட்டபோது, அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால், நோட்டீசில் இருந்த சர்வே எண்ணும், ராஜா இருந்த இடத்தின் சர்வே எண்ணும் வேறு வேறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பதில் எதுவும் அளிக்காமல் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், தவறாக ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.