பெண்ணின் வீட்டு முன்பு நிர்வாணமாக நின்ற நபர் - வீடியோவை பார்த்து அதிர்ந்த நீதிபதி

Update: 2024-08-10 13:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காட்டை சேர்ந்த 60 வயதான மதினா பீவி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது கிராமத்தில் நடைபெற இருந்த இளவயது சிறுமியின் திருமணம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுத்ததாகவும், இதனால் சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் என் வீட்டின் மீது கற்களை எரிந்து, என் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர் தரப்பில் வழங்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மதினா பீவியின் வீட்டு முன்பு எதிர்மனுதாரர் நிர்வாணமாக நின்றபடி ஆபாச வார்த்தைகளால் திட்டிய காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் கோரிக்கைபடி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்