புதுச்சேரி திருக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், சார்பதிவாளராக பணியாற்றி வரும் பாஸ்கரன், கடந்த 10-ம் தேதி இரவு பணி முடிந்து அலுவலக ஊழியருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், பாஸ்கரனை தாக்கி, அவர் வைத்திருந்த ஆவணங்களை பறித்துச் சென்றது. புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், வில்லியனூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், அனிஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், பத்திர பதிவு எழுத்தர் மணிகண்டன் என்பவரின் அறிவுறுத்தல் பேரில், சார்பதிவாளர் பாஸ்கரன் மீது தாக்குதல் நடத்தி ஆவணங்களை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து, மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இந்தவழக்கில் தப்பியோடிய பிளோமின்தாஸ் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.