சாலையை சீரமைக்க கோரி கொளுத்தும் வெயிலில் போராட்டம்..திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் பல இடங்களில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பொன்னேரி நகர்மன்ற தலைவருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை சீரமைக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.