"பிரதமர் மோடியே" - கான்ஃபிடன்ஸாக அடித்து சொன்ன டிடிவி | PM Modi | TTV Dhinakaran

Update: 2024-03-18 06:41 GMT

மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வருவார் என்று அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, தனது மனைவி அனுராதாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி என்றார். இந்த தேர்தலிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வருவார் என்று டிடிவி தினகரன் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்