"அதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும்.." - கொந்தளித்த ஜெயக்குமார்

Update: 2024-06-02 16:07 GMT

வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெயக்குமார், தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என பிரகாஷ்ராஜ் பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது என்றும்,

ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69 சதவீத இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்