பொங்கல் தொகுப்பு திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் நிவாரண நிதி வழங்க கோரி வந்த விண்ணப்பங்களை தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். மேலும், கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.