தொடர் விடுமுறையால் பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளியலாடினர். தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் தமிழகம், மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.. சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...