மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தல்களில் நடந்த விதிமீறல்களை குறிப்பிட்டு, பிரச்சாரத்தின்போது பிரச்சினை அடிப்படையிலான விவாதத்தை முன்னெடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறியதற்காக நோட்டீஸ் பெற்ற வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் மீண்டும் நடத்தை விதிகளை மீறினால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. போட்டியாளர்களை இழிவுபடுத்தும் அல்லது அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் மோசமான ரசனை அல்லது கண்ணியத்திற்குக் குறைவான பதிவுகள் பகிரப்படக்கூடாது என்றும் அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது