ஈரோடு - செங்கோட்டை பயணிகள் ரயில், வழக்கம்போல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, ரயில் இஞ்சினின் முன்புறம் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் சிக்கியிருந்தது குறித்து ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாழையூத்து ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தபோது, ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் சிதைந்த நிலையில், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் வந்தபோது பயணிகள் தகவல் தெரிவித்ததன்பேரில் உடல் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.