கடன் செலுத்தும் தேதி முடிந்ததும் போன் ஹேக்..பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கதி
கடன் செலுத்தும் தேதி முடிந்ததும் போன் ஹேக்..பாஜக பிரமுகருக்கு நேர்ந்த கதி
சென்னையில் லோன் ஆப் நிறுவனம் ஒன்று, பாஜக பிரமுகரை பல்வேறு விஐபி-க்களின் படங்களுடன் அவதூறக சித்திரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள டெல்லி கோபி என்ற பாஜக பிரமுகர், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கடந்த 4 ஆம் தேதி ராயல் கேஷ் என்ற செயலி மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், கடன் செலுத்தும் தேதி முடிவடைந்த நிலையில், தன்னுடைய செல்போன் முழுவதும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் பாஜக பிரமுகர்களின் படங்களை தன்னுடன் இணைத்து அவதூறாக சித்தரித்து படங்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.