கொத்து பரோட்டா இல்லாததால் சால்னா சிந்த சிந்த கண்மூடித்தனமாக மாஸ்டரை புரட்டி எடுத்த நபர்கள்
வத்தலகுண்டு அருகேயுள்ள பெரியகுளம் சாலையில் உணவகம் நடத்தி வருபவர் இம்தா துல்லா. இவரது உணவகத்துக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஹோட்டலுக்குள் புகுந்து கொத்து புரோட்டா கேட்டுள்ளனர். அப்போது, கொத்து புரோட்டா இல்லையெனக் கூறிய புரோட்டா மாஸ்டர் முத்துவை, கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.