கடன் தொல்லையால் நடந்த சோகம்.. 10 வயது பெண்ணுக்கு தாய் செய்த காரியம் | Pattukkottai | Thanthitv

Update: 2024-08-01 02:35 GMT

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் சாலையில் வசித்து வருபவர் ராமநாதன். இவருக்கு காளீஸ்வரி என்பவருடன் திருமணமான நிலையில், 10 வயதில் நிவ்யதர்ஷினி என்ற பெண் குழந்தை ஒருவர் இருந்தார். டீக்கடை வைத்து தொழில் செய்து வரும் ராமநாதன், திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடனில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது மகளை விஷம் குடிக்க வைத்து கொன்ற காளீஸ்வரி, பின் தானும் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்