மரத்தடியில் தங்கியிருந்த நோயாளிகள்... அதிரடி நடவடிக்கை எடுத்த MLA | Thanjavur
தஞ்சாவூரில் மரத்தடியில் தங்கியிருந்த, நோயாளிகளின் உறவினர்களுக்காக், புதிய கட்டடத்தை திறக்க சொல்லி சட்டப்பேரவை பொது கணக்குக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவமனையில் போதிய வசதியின்றி மரத்தடியில் அமர்ந்திருந்த நோயாளிகளின் உறவினர்களை, செல்வ பெருந்தகை தலைமையிலான குழு சந்தித்து குறைகளை கேட்டறிந்தது. அப்போது, புதிதாக கட்டப்பட்ட காத்திருப்பு கூடம் திறக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக கட்டடத்தை திறக்க சொல்லி, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, மரத்தடியில் இருந்தவர்கள் தங்க வைக்கப்பட்டனர்