பிள்ளைகள் முன் கிணற்றில் குதித்த பெற்றோர்.. கதறிக்கொண்டே கூச்சலிட்ட குழந்தைகள் - அடுத்தடுத்து சடலமாக கிடைத்த அப்பா, அம்மா..

Update: 2023-08-05 06:20 GMT

சேலத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவனும், மனைவியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், சூரமங்கலம் அருகே மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சீதா என்பவருடன் திருமணமாகி, இரு பிள்ளைகள் உள்ள நிலையில், சேலத்தில் உள்ள சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் சாலையில் இருவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சீதா, அருகில் உள்ள கிணற்றில் குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த பழனிச்சாமியும் அதே கிணற்றில் குதிக்க, தாய் - தந்தை இருவரும் கிணற்றில் குதித்ததை கண்டு குழந்தைகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனே, சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தம்பதி இருவரையும் வீரர்கள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோரை இழந்து இரு குழந்தைகளும் நிர்கதியாய் நின்றது அனைவரையும் கலங்கடித்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்