தேவேந்திர குல மக்கள் இயக்க தலைவர் கைது... திருச்சியில் பரபரப்பு
பரமக்குடியில் கைது செய்யப்பட்ட தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் தலைவர் குமுளி ராஜ்குமாரை போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்துள்ளதாக கூறி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உறவினர்களும் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு அவரைப் பற்றி எந்த தகவலையும் குடும்பத்தினருக்கு போலீசார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தேவேந்திர குல மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்துள்ளதாக கூறிய அவர்கள், இதனை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தனர்.