பழனிக்கு படையெடுத்த இஸ்லாமியப் பெண்கள்.. "நண்பா நண்பா.. நீ, நான், நாம் ஆவோம்"
பழனியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காண, இந்து மத தோழியுடன் இஸ்லாமியப் பெண்மணி வந்திருந்தார். பழனியில் 2ம் நாள் முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயிஷா பேகம் என்பவர், தனது பக்கத்துவீட்டு தோழி பூங்கொடியுடன் மாநாட்டை பார்க்க வந்ததாகவும், மாநாடு மிகச்சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.