பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் கடை நடத்தி வரும் விஜயன் என்பவர், தன்னை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த தடைவிதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வருவாய் ஆவணங்களின் படி தனக்குரிய நிலத்தில் இருந்து தன்னை அப்புறப்படுத்த கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த பழனி கோவில் நிர்வாகம், விஜயன் கடைகள் மற்றும் புதிய கட்டுமானங்களை மேற்கோண்டு வருவதாகவும், ஆவணங்களின்படி மனுதாரருக்கு நிலம் சொந்தமானதா என விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, கோவில் நிலத்தில் எப்படி கடை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,
கிரிவலப்பாதையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.