பழனியில் விபரீதமாகும் விவகாரம்... பகீர் கிளப்பும் சேதி | Palani Murugan Temple | Thanthitv
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அருகே அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன் கேமராக்களின் பயன்பாடுகளை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கோவில்கள், இயற்கை காட் சிகள், வனப்பகுதிகள், அணைகள் போன்வற்றை உயரத்தில் இருந்தபடியே காட்சிப்படுத்தும் இந்த டிரோன் கேமராக்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் அதிக வியூஸ் லைக்குகள் பெறுவதற்காக இளைஞர் கள் அதிதொழில்நுட்ப கேமராக்கள் மூலம் காட் சிகளை படம் பிடித்து வருகின்றனர். ட்ரோன்களை பயன்படுத்தி சமூக விரோதிகள் அசம்பாவிதங்களை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.