ஆஸ்கர் இயக்குநர் மீது ஆஸ்கர் புகழ் தம்பதி பொம்மன், பெள்ளி குற்றச்சாட்டு
ஆஸ்கர் ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி தங்களை ஏமாற்றிவிட்டதாக, ஆஸ்கர் புகழ் தம்பதி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்...
நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில், யானைகள் பராமரிப்பு குறித்து தயாரிக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. கார்த்திகி இயக்கி இருந்த இந்த ஆவணப்படத்தில், யானை பராமரிப்பு தம்பதியான பொம்மன், பெள்ளி நடித்திருந்த நிலையில், ரகு, பொம்மி ஆகிய யானைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், அவணப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பல்வேறு துறை சார்ந்த தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.