இறந்த பின்னும் 6 உடல்களில் வாழும் பெண் - தமிழகத்தில் நடந்த உருக்கமான சம்பவம்

Update: 2024-07-13 06:39 GMT

உதகையில் மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் 6 பேருக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.உதகை மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி எமிலி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவரை மகன்கள் மீட்டு உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், மூளையில் ரத்தம் உறைந்து மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, எமிலியின் மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை தானமாக வழங்கினர். உதகை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தலைமையிலான மருத்துவ குழுவினர், அறுவை சிகிச்சை செய்து மூதாட்டியின் உறுப்புகளை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அந்த உடலுறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படவுள்ளன. இதற்கிடையே, உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி எமிலியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா அரசு சார்பில் மரியாதை செலுத்தி உடலை அடக்கம் செய்ய அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்