அக். 2-ம் தேதி தலைமை செயலகம் முற்றுகை - டாஸ்மாக் சில்லறை கடை பணியாளர்கள் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 2-ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் சில்லறை மதுபான கடை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு, பணி நிரந்தரப்படுத்தி காலமுறை முழு ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும், முழுமையான ஈஎஸ்ஐ, பிஎப் போன்ற வசதி ஏற்பட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால்,உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.