சென்னை மைலாப்பூரில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சியில் 23 ஆயிரம் ஊழியர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மழைக்காலங்களில் வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக இருப்பதாகவும், சில பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றுவது சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தார். மாநகராட்சி பணிகளில் ஒப்பந்ததாரர்கள் முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.