கோபத்தில் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டு...வடசென்னையை பரபரப்பாக்கிய பொது குழு கூட்டம்
சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்க 18 வது ஆண்டு பொது குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது
மிட்டாய் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த இருதரப்பினர் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு சங்க பிரச்சினைகளை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும் என எச்சரித்ததால் உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.