வடமாநில இளைஞரை எரித்து கொன்ற மர்ம நபர்கள்... வலைவீசி தேடும் போலீஸ்.. ஓசூரில் பயங்கரம்

Update: 2023-08-18 06:05 GMT

ஓசூர் அருகே வடமாநில இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே உள்ள பல்லூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டனர். உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த தீபக் ஹரிசன் என்பதும், ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. தீபக் ஹரிசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்