உயிர் பயத்தை காட்டும் எமன் -திடீர் என்ட்ரி கொடுத்த அதிகாரி -பதறிப்போன கடைக்காரர்
கேரள மாநிலம், பாண்டிக்காடு பகுதியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக கேரள எல்லை சாலைகளில் அமைந்துள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக வவ்வால்கள் இருக்கும் மலை பகுதிகளில் இருந்து வரக்கூடிய butter fruit, ரம்புட்டான், மங்குஸ்தான் பழக்கடைகளில் ஆய்வு செய்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயனிகளிடமும் காய்ச்சல் தொடர்பான சோதனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.