நிபா வைரஸ் எதிரொலியாக கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் கூடலூர் சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்..மலப்புரம் மாவட்டத்தை அச்சுறுத்தி வருகிறது நிபா வைரஸ்...மலப்புரம் மாவட்டம் கூடலூர் அருகாமையில் உள்ளதால் அதிக அளவிலான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நிபா வைரஸ் தமிழகப் பகுதிகளில் பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் எல்லையில் உள்ள நாடு காணி சோதனை சாவடியில் ஆய்வை தொடங்கியுள்ளனர்.குறிப்பாக அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் முழு ஆய்வு மேற்கொள்கின்றனர்.
காய்ச்சல் மற்றும் அதற்கான அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளனர்...பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தே வரவேண்டும் எனவும் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.இரவு பகலாக அனைத்து வாகனங்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறது.