"வயநாடு போல் ஊட்டியும்..." தமிழகத்துக்கு அடிக்கும் அபாய மணி - இயற்கை ஆர்வலர்கள் அச்சம்

Update: 2024-08-01 05:23 GMT

வயநாடு போல் ஊட்டியும்..." தமிழகத்துக்கு அடிக்கும் அபாய மணி - இயற்கை ஆர்வலர்கள் அச்சம்

வயநாடு போல நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் கடந்த காலங்களில் பலமுறை நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு கோடப்பமந்து பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பத்து பேர் உயிரிழந்தனர். 1983-ல் குன்னூர் அருகே மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 வீடுகளில் குடியிருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்து போனார்கள். அதேபோல் கெத்தை பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தனர். வயநாடு போல நீலகிரியிலும் சட்டவிரோத கட்டிடங்கள் அதிகமாக கட்டப்பட்டு வருவதால், நிலச்சரிவு ஏற்படும் முன்பு அந்த பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்