ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை.. 2 கும்கி யானைகளின் 4 மணி நேர போராட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானையை, இரண்டு கும்கி யானைகள் துணையுடன், வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
குனில் வயல், மொளப்பள்ளி கிராமத்திற்குள் காட்டுயானை ஒன்று புகுந்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், காட்டுயானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் களம் இறக்கப்பட்டது. மேலும், வனத்துறையினர் சுமார் 50பேர், மூன்று குழுக்களாக பிரிந்து, காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அனைவருக்கும் அந்த காட்டு யானை டேக்கா கொடுத்த நிலையில், சுமார் 4 மணிநேர போராட்டத்திற்குப்பின் காட்டுயானை விரட்டியடிக்கப்பட்டது.