வட்டாட்சியர் போனில் இருந்த ஆதாரம்.. நீலகிரியில் விடிய விடிய சோதனை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தகவலின் பேரில் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், வட்டாட்சியர் கோமதி கணக்கில் ஜி பே மூலமாக சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யப்பட்டதை கண்டறிந்ததாக கூறப்படுகிறது. விடிய விடிய ஊழியர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அனைவரது வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, லஞ்சம் பெற்றது தொடர்பாக விரைவில் வழக்கு பதியப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.