நீலகிரி மாவட்டம் இருவயல் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததை தொடர்ந்து, அங்கு சிக்கி தவிக்கும் 13 குடும்பங்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்ள.
மேற்கு தொடர்ச்சி மலையில் நீடிக்கும் மழை காரணமாக தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், இருவயல் கிராமத்தை சூழ்ந்தது. முழங்கால் அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 16 வீரர்கள், இருவயல் கிராமத்திற்கு சென்றனர். அங்கு வீடு வீடாகச் சென்று வெளியேற விருப்பப்பட்டவர்களை அழைத்து வரும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொரப்பள்ளி அரசு பழங்குடியின பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர். அங்கிருந்து வெளியேற அடம்பிடித்த ஒரு சிலர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் இருவயல் கிராமத்தை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.